Jailer

Dhananjayan review https://youtu.be/fHKTfRmqHEE

By Karthik Subbaraj https://youtube.com/shorts/EZPG6LW-Su4 … Dark Humor … Lighting

Jailer 2 - Jailer 3

...

சாதாரண கண்ணாடியை

கழட்டி மாட்டுகிறார்...

நடக்கிறார்...

சுருட்டு புகைக்கிறார்..

கார் கதவை திறந்து வெளியேறுகிறார்...

சேரில் அமர்கிறார்...

புன்னகைக்கிறார்..

நிதானமாக ஒரு சில

வார்த்தைகள் மட்டுமே பேசுகிறார்...

எளிய சாதாரண உடை,

வயதை மறைக்காத ஒப்பனை..

பஞ்ச் டயலாக் இல்லை..

ஓபனிங் சாங் இல்லை ..

அதிரடி சண்டைக்காட்சிகள் இல்லை..

கதையில் ஒன்றும் புதுமை இல்லை..

ஆனாலும் திரையில் தோன்றும்

அவரது ஒவ்வொரு அசைவும் ரசிகனை மட்டுமல்ல, நம்மையும் காந்தம் போல ஈர்க்கிறது. வசீகரிக்கிறது...

அவரது ஒவ்வொரு அசைவையும்

கண்டு வெடித்துக் கிளம்பும் ரசிகனின் கொண்டாட்டத்தை,

அன்பை

காணும் போது..

அந்த உற்சாகம் நமக்கும் தொற்றிக்கொள்கிறது...

ரஜினியிசம் எனும்

கண்ணுக்கு தெரியாத அந்த காந்தசக்தி நம்மை வசியம் செய்து கட்டிப் போட்டு விடுகிறது..

பாட்ஷா , #ஜெயிலர் போன்ற ரஜினியின் படங்களை தியேட்டரில் சென்று பார்ப்பதே ஒரு அற்புதமான அனுபவம்..

ரஜினி படங்களை அனுபவிக்க வேண்டும். ஆராயக் கூடாது. ஆராய்ந்தால் அந்த அனுபவம்

கிட்டாது...

எனவே ஒரு படத்தை பார்க்கும்போது அதன் முழுமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால்,

ஒரு ரசிகனின் மனநிலையோடு படம் பார்த்து கொண்டாடி மகிழுங்கள்..

படித்ததில் பிடித்தது

Devotee

...

Tags: Movie, 2023