வாழ்க்கை

பள்ளி, கல்லூரி என அவர்களுக்குப் பிடித்த கல்வியைக் கற்று அவர்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் நிலைக்கும் வந்துவிட்டார்கள்.

நம் வயதுக்கேற்ற சின்னச் சின்ன

உடல் உபாதைகள் நமக்கு இருந்தபோதும் ஆரோக்கியத்தை காத்துக்கொண்டு நாட்களை நகர்த்திக்

கொண்டிருக்கிறோம்.

எத்தனையோ சந்தோசங்களும்.. சிரிப்புகளும்.. எத்தனையோ துக்கங்களும்... கண்ணீரும்... எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டோம்.

இயற்கைச் சீற்றங்கள்

பேரழிவுகள், விபத்துக்கள்,

கொடிய மற்றும் கொள்ளை நோய்கள், பஞ்சங்கள்,

போர்கள், தீவிரவாதம்

ஆகியவற்றிலிருந்து இதுவரை

தப்பித்துக் கொண்டோம்.

பெரியவர்களின்

நிறைய ஆசீர்வாதங்கள்,

சில சமயங்களில் காயப்படுத்திய சொற்கள் இரண்டையும் சந்தோசமாய் ஏற்றுக்

கொண்டோம்.

சில நண்பர்கள்

சில உறவுகள்

பிரிந்து போனதையும்,

சில நண்பர்கள்

சில உறவுகள்

நம்மை மறந்து போனதையும் இயல்பாய் எடுத்துக் கொண்டோம்.

வாழ்வின் இக்கட்டான நேரங்களில் ஆத்மார்த்தமான நண்பன் அல்லது தோழியிடமிருந்து

ஆலோசனையைப் பெற்று அதிலிருந்து மீண்டு வந்தோம்.

பிறந்தநாள்,

திருமண நாள்,

சுப நிகழ்வுகள், விழாக்கள், புதுவருடம் போன்ற விசேஷ தினங்கள்,கோவில் திருவிழா,

தீபாவளி மற்றும் தைப்பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூடி மகிழ்ந்தோம்.

பணம்,

பட்டம் பதவி புகழ் ,

வீடு, தோட்டம் ,

நகை , கார்,

சொத்து சுகம் உறவுகள்

எதுவும் நம்முடன் கடைசிவரை வரப்போவதில்லை என அறிந்துகொண்டோம்..

எல்லாவற்றையும் மன்னித்துவிடவும்

சிலவற்றையாவது மறந்துவிடவும்

கற்றுக்கொண்டோம்.

காலம்

எல்லாக் காயங்களையும் ஆற்றும்.

எனவே

இக்கணத்தில் வாழ்வோம் !

இரா. முத்துகுமார

Tags: Time, Life