ஆயுள்

This revision is from 2022/09/30 17:57. You can Restore it.

இந்திரன் மனைவி இந்திராணி ஆசையாக ஒரு கிளி வளர்த்தார். ஒருநாள் அந்த கிளிக்கு நோய்வாய்பட்டது. உடனே இதை இந்திரனிடம் சென்று கிளி இறக்கும் நிலையில் உள்ளது அதைஎப்படியாவது காப்பாற்றுங்கள் கிளி இறந்தால் நானும் சேர்ந்து இறந்துவிடுவேன் என்றாள்,

          

உடனே இந்திரன், உயிர்களைபடைக்கும் பிரம்மனிடம்  சென்று இதைப்பற்றி கூறினார், அதற்கு பிரம்மன் உயிர்களை படைப்பது நான்தான் ஆனால் அதைக் காப்பது விஷ்னுவின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம் வா நானும் உன்னுடன் வருகிறேன் என்று சென்றனர்,

       

பின்னர் விஷ்னுவிடம் நடந்ததை கூறினர், அதற்கு விஷ்னு, உயிர்களை எடுப்பது சிவனின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம், வாருங்கள் நானும் உங்களுடன் வருகிறேன் என்று மூவரும் சென்றனர்,

          

பின்னர், சிவனிடம் நடந்ததை கூறினர், அதற்கு சிவன்,  உயிர்களை எடுக்கும் தொழிலை எமதர்மனிடம் கொடுத்து விட்டேன், வாருங்கள் நானும்வந்து எமனிடம் முறையிடுகிறேன் என்றார்,

         

நடந்ததை எமனிடம் கூறினர், எல்லா உயிர்களின் ஆயுளையும் ஒரு ஓலையில் எழுதி அதை ஒரு அறையில் கட்டிவிடுவேன் அது என்றைக்கு அறுந்து விழுகிறதோ அன்று இறந்துவிடும், எனவே கிளியின் ஓலையை எடுத்து மாற்றி எழுதலாம் வாருங்கள் என்று அந்த அறைக்கு அழைத்து சென்றார்,

           

உள்ளே நுழைந்ததும் ஒரு ஓலை அருந்து வழுந்தது அது அந்த கிளியின் ஓலைதான் அதை எடுத்து படித்தனர்

             

அதில், இந்திரன், சிவன், பிரம்மன், விஷ்னு, எமன் இவர்கள் ஐவரும் ஒன்றாக இந்த அறைக்குள் வரும்போது கிளி இறந்துவிடும் என்று எழுதியிருந்தது,

           

எனவே படைத்தவன் நினைத்தால்  கூட ஆயுளை மாற்றமுடியாது, வாழும் காலம்வரை சந்தோஷமாக வாழ்வோம்